English » |
அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
| மூலவர் | : | பாடலாத்ரி நரசிம்மர் |
| உற்சவர் | : | பிரகலாதவரதர் |
| அம்மன்/தாயார் | : | அஹோபிலவல்லி |
| தல விருட்சம் | : | பாரிஜாதம் |
| தீர்த்தம் | : | சுத்த புஷ்கரிணி |
| ஆகமம்/பூஜை | : | வைகானஸம் |
| பழமை | : | 1000-2000 வருடங்களுக்கு முன் |
| புராண பெயர் | : | - |
| ஊர் | : | சிங்கப்பெருமாள் கோயில் |
| மாவட்டம் | : | காஞ்சிபுரம் |
| மாநிலம் | : | தமிழ்நாடு |
|
|
|
| பாடியவர்கள்: | |
| | |
| - | |
| | |
| திருவிழா: | |
| | |
| சித்திரை வருடப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, நரசிம்மர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, வைகாசியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி 10 நாள் பிரமோற்ஸவம், ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, தை சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் 5 நாள் தெப்ப உற்சவம், பங்குனி உத்திரம். | |
| | |
| தல சிறப்பு: | |
| | |
| பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தின் சிறப்பம்சம். மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது.இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது.நரசிம்மர் கோயில்களில், நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் தரிசனம் தருவார். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் கோயிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. | |
| | |
| திறக்கும் நேரம்: | |
|
| | |
| காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
| முகவரி: | |
| | |
| அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் கோயில், சிங்கப்பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-603 202, காஞ்சிபுரம் மாவட்டம். | |
| | |
| போன்: | |
| | |
| +91- 44-2746 4325, 2746 4441 | |
| | |
| பொது தகவல்: | |
| | |
| இங்கு மூலவர் சன்னதியின்கீழ் உள்ள விமானம் பிரணவ கோடி விமானம் எனப்படும். | |
| | |
|
|
| பிரார்த்தனை | |
| | |
| கடன் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி கிடைக்க, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக இங்கு சிறப்புபூஜை செய்யப்படுகிறது. திருவாதிரை, சுவாதி, , நட்சத்திரத்தினரும், ராகு திசை நடப்பவர்களும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வழிபாடு செய்தால் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. கோயிலின் பின்புறமுள்ள அழிஞ்சல் மரம் மிகவும் சக்தி வாய்ந்தது. திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இம்மரத்தில் சந்தனம், குங்குமம் பூசி நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர். | |
| | |
| நேர்த்திக்கடன்: | |
| | |
| பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். | |
| | |
| தலபெருமை: | |
| | |
| "பாடலம்' என்றால் "சிவப்பு' "அத்ரி' என்றால் "மலை'. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்தால் "பாடலாத்ரி' என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது. இது பல்லவர் கால குடைவரைக் கோயிலாகும்.தாயார், ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர். | |
| | |
|
| தல வரலாறு: | |
| | |
| ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. மூலவர் பாடலாத்ரி நரசிம்மர் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கையை அபயகரமாகவும் , இடது கை தொடை மீது வைத்த நிலையிலும் உள்ளது. மூன்று கண்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவர் பிரகலாதவரதன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில், பிரணவகோடி விமானத்தின் கீழ் அருள்கின்றனர்.மூலவர் குகைக்கோயிலில் அருள்பாலிப்பதால் அவரை வலம் வர வேண்டுமென்றால் சிறிய குன்றினையும் சேர்த்து வலம் வர வேண்டும். | |
| | |
|
| சிறப்பம்சம்: | |
| | |
| அதிசயத்தின் அடிப்படையில்: மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது.
Route:
|
|
இருப்பிடம் :செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் வழியில் 8 கி.மீ. தூரத்தில் சிங்கபெருமாள் கோவில் உள்ளது. ஊரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :சென்னை தாஜ் கோரமண்டல்
போன்: +91-44-5500 2827
லீ ராயல் மெரிடியன்
போன்: +91-44-2231 4343
சோழா ஷெரிட்டன்
போன்: +91-44-2811 0101
தி பார்க்
போன்: +91-44-4214 4000
கன்னிமாரா
போன்: +91-44-5500 0000
ரெய்ன் ட்ரீ
போன்: +91-44-4225 2525
அசோகா
போன்: +91-44-2855 3413
குரு
போன்: +91-44-2855 4060
காஞ்சி
போன்: +91-44-2827 1100
ஷெரிமனி
போன்: +91-44-2860 4401, 2860 4403
அபிராமி
போன்: +91-44-2819 4547, 2819 2784
கிங்ஸ்
போன்: +91-44-2819 1471
சன் பார்க்
போன்: +91-44-4263 2060, 4264 2060
Images: |
Nearest temples:
|
|
|
No comments:
Post a Comment